புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளின் தாக்க மதிப்பீடு குறித்த ஆய்வினை மேற் கொள்வதற்கு சிம்பயோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்திற்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) அனுமதி அளித்துள்ளது.
இந்தக் குறிப்பிட்ட ஆய்வானது, பல ஆண்டுகளாக புவிசார் குறியீடுகளால் கை வினைஞர்கள் / தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட பெரு நன்மைகள் குறித்து பகுப்பாய்வு செய்ய NABARD வங்கிக்கு உதவும்.
இன்றைய நிலவரப்படி, NABARD வங்கியின் ஆதரவினைப் பெற்ற 144 தயாரிப்புகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
NABARD வங்கியின் ஆதரவுடன் புவிசார் குறியீட்டினைப் பெற்ற முதல் தயாரிப்பு, தெலுங்கானாவைச் சேர்ந்த போச்சம்பள்ளி இகாட் (புடவை) ஆகும்.