TNPSC Thervupettagam

புவிசார் குறியீடு

August 18 , 2019 1798 days 879 0
  • மத்திய வணிக மற்றும் தொழிற் துறை அமைச்சகத்தின் தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தின் ஊக்குவிப்பிற்கான துறையானது  மேலும் 3 புதிய புவிசார் குறியீட்டு (Geographical Indication - GI) பொருட்களைப் பதிவு செய்துள்ளது.
  • அவைகளாவன திரூர் வெற்றிலை, தவல்ஹ்லோஹ்புவன் மற்றும் மிசோ புவான்சேய்.
  • GI என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் உருவாக்கப்படும் பொருளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அடையாளக் குறியீடாகும். இது அந்த உருவாக்கத்தின் காரணமாக இருக்கும் குணங்கள் அல்லது நன்மதிப்பைக் கொண்டிருக்கும்.
  • திரூர் வெற்றிலை இலையானது, அதன் லேசான தூண்டல் செயல் மற்றும் மருத்துவப் பண்புகள் ஆகிய இரண்டிற்காகவும்  அறியப்படுகின்றது.
  • தவல்ஹ்லோஹ்புவன் என்பது மிசோரத்தைச் சேர்ந்த நெருக்கமாக நெய்யப்பட்ட ஒரு துணி வகையாகும்.
  • மிசோ புவான்சேய் என்பது பல வண்ணங்கள் கொண்ட மிசோ சால்வையாகும். இது ஒவ்வொரு மிசோரம் பெண்மணியின் முக்கியமான மற்றும் இன்றியமையாத உடைமையாகும்.

  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்