வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை புவிசார் குறியீடு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு மூவர்ணக் கொடி முத்திரையை வெளியிட்டுள்ளது.
இந்த முத்திரை “வியக்கத்தகு இந்தியாவின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்” என்ற வாசகத்தை அதன் அடியில் அச்சிடப்பட்டு கொண்டிருக்கின்றது.
ஒரு திறந்தவெளிப் போட்டியில், வெற்றிக்கான முத்திரை அதிரி சாட்டர்ஜி என்பவராலும், வெற்றிக்கான வாக்கியம் அகான்சா திரிபாதி என்பவராலும் வடிவமைக்கப்பட்டது.
புவிசார் குறியீட்டிற்கான முத்திரையையும் வாசகத்தையும் தேர்ந்தெடுத்தற்கான நோக்கம் யாதெனில் அறிவுசார் சொத்துரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதும், நாட்டில் புவிசார் குறியீடு கொண்ட பொருட்களின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துவதும் ஆகும்.