TNPSC Thervupettagam

புவித் தகவல் மையத்தை அடிப்படையாகக் கொண்ட ஆளில்லா விமானம் மூலமான வரைபடமிடல்

November 22 , 2017 2537 days 887 0
  • சென்னை மாநகராட்சி, ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் அதன் சேவைகளையும் தனியார் சொத்துகளையும் வரைபடமிடுவதற்கான திட்டத்தை புவித்தகவல் அமைப்பை அடிப்படையாக் கொண்டு ஆரம்பித்துள்ளது.
  • இவற்றில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் என்பது ஆளில்லா தானியங்கி விமானங்கள் என அழைக்கப்படும்.
  • செயற்கைக் கோள் புகைப்படங்களை போலன்றி, விமானங்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் குறைந்த உயரத்தில் 60 மீட்டர் உயர அளவிலிருந்து பொருட்களை மாநகராட்சிக்கு  அடையாளம் காண உதவும்.
  • அதன் மூலம் 5 சென்டிமீட்டர் அளவிற்கு துல்லியமான, உயர்தரத்தில் அமைந்த தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.
  • விரிவான டிஜிட்டல் வரைபடமிடலும், புவித் தகவல் அமைப்பு முறையிலான வரைபடமிடலும் மாநகர வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.
  • இதில் உள்ள முப்பரிமாண முறையானது கட்டுமானத்தின் இயல்பைப் பற்றிய சரியான தகவல்களை கொடுக்கும்.
  • இந்த வரைபடமிடலின் முக்கிய நோக்கம் கட்டிடங்களை குறைந்த அளவில்  மதிப்பிட்டுக்காட்டி வரி குறைவாக வசூலிக்கப்படுவதை தடுத்து முறையான சொத்து வரி வசூலின் மூலம் வரி வருவாயை அதிகப்படுத்துவது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்