TNPSC Thervupettagam

புவித்தாழ்மட்ட சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் – இணையதள இணைப்பு வசதி

June 8 , 2021 1176 days 628 0
  • ஒன்வெப் (OneWeb) என்பது புவித்தாழ்மட்ட சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களுக்கு தகவல்தொடர்பு சேவை வழங்கும் ஒரு அமைப்பாகும்.
  • 36 செயற்கைக்கோள்களின் அடுத்த குழுமத்தினை இது ரஷ்யாவிலிருந்து விண்ணில் ஏவியுள்ளது.
  • இத்தோடு சுற்றுப்பாதையிலுள்ள ஒன்வெப் நிறுவனத்தின் மொத்த செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையானது 218 ஆகியுள்ளது.
  • இது ஒன்வெப் அமைப்பின் 648 புவித்தாழ்மட்ட செயற்கைக் கோள் தொகுப்பின் ஓர் அங்கமாக இருக்கும்.
  • ஒன்வெப் நிறுவனமானது இவற்றைப் பயன்படுத்தி ஐக்கிய ராஜ்ஜியம், அலாஸ்கா, வட ஐரோப்பா, கிரீன்லாந்து, ஆர்க்டிக் கடல் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இணைய தள இணைப்பு வசதியை வழங்க உள்ளது.
  • இந்தத் திட்டமானது “Five to 50” சேவை என அழைக்கப் படுகிறது.
  • இது 50 டிகிரி அட்ச ரேகையின் வடக்கேயுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இணைய சேவையை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்