TNPSC Thervupettagam

புவியிடங்காட்டி தட கண்காணிப்பு காலணி சாதனம்

November 12 , 2023 416 days 231 0
  • முதன்முறையாக, ஜம்மு - காஷ்மீர் காவல்துறையானது ஒன்றியப் பிரதேசத்தில் பிணையில் இருக்கும் தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்காணிக்கச் செய்வதற்காக புவியிடங்காட்டி தட கண்காணிப்பு காலணி சாதனங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இதன் மூலம், இந்தியாவில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் காவல் துறையானது புவியிடங்காட்டி தட கண்காணிப்பு காலணி சாதனங்களைப் பயன்படுத்திய காவல் துறையாக மாறியுள்ளது.
  • அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் புவியிடங்காட்டி தட கண்காணிப்பு காலணி சாதனம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.
  • சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்காக பிணை, சிறைவாச விடுமுறை மற்றும் வீட்டுக் காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக அந்நாடுகள் இதைப் பயன்படுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்