புவியினுடைய அச்சில் ஏற்படும் மாற்றத்தில் அதிகரிப்பு
May 5 , 2021 1300 days 662 0
அமெரிக்க புவிசார் இயற்பியல் ஒன்றியம் மேற்கொண்ட ஒரு சமீபத்திய ஆய்வில் பனிப்பாறை உருகும் நிகழ்வானது புவியினுடைய அச்சில் ஏற்படும் மாற்றத்தை அதிகரிக்கிறது எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
காலநிலை மாற்றங்கள் பனிப்பாறை உருகுதலை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக புவியின் துருவங்கள் புதிய திசைகளில் நகர்வதாகவும் இந்த புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
புவியின் சுழல் அச்சானது ஆண்டுக்கு சுமார் 10 செ.மீ. நகர்வதாக நாசா கூறுகிறது.
வட துருவமானது கிழக்கு நோக்கி நகர்வதற்கு முக்கிய காரணம் நீர் மண்டலங்களில் ஏற்படும் மாற்றங்களாகும்.