TNPSC Thervupettagam

புவியின் 5வது மிக வெப்பமான ஆண்டு – 2021

January 13 , 2022 921 days 469 0
  • ஐரோப்பிய ஒன்றியத் திட்ட  அமைப்பான கோபர்நிகஸ் பருவநிலை மாற்றச் சேவை எனும் அமைப்பினால் சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டானது புவியில் நிலவிய 5வது மிக வெப்பமான ஆண்டாகும் என இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, கடந்த 7 ஆண்டுகள், இதுவரை பதிவானதில் மிக வெப்பமான ஆண்டுகளாகும்.
  • பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 12 மாத காலப் பகுதி என்ற இந்தப் பிரிவில் 2021 ஆம் ஆண்டானது 5வது வெப்பமிக்க ஆண்டாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்