நாசாவின் இடப்பெயர்வு புறக்கோள் ஆய்வு செயற்கைக்கோள் (TESS) ஆய்வுத் திட்டம் தனது நட்சத்திர மண்டலத்திற்குள்ளேயே காணப்படும் புவியின் அளவினை ஒத்துள்ள இரண்டாவது பாறைக் கோளினைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த கிரகத்தின் மேற்பரப்பின் வரம்பானது திரவ வடிவிலான தண்ணீர் உருவாகக் கூடிய வகையில் உள்ளது.
இந்தக் கோளிற்கு ‘TOI 700 e என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கோளானது 95% புவியின் அளவினை ஒத்துள்ளதாகவும், மேலும் பாறைகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
முன்னதாக, வானியலாளர்கள் இந்த மண்டலத்தில் TOI 700 b, c மற்றும் d என அழைக்கப் படும் மூன்று கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.