TNPSC Thervupettagam

புவியின் வெற்றி வாகையாளர்கள் விருது 2022

November 29 , 2022 601 days 321 0
  • இந்திய வனவிலங்கு உயிரியலாளர் டாக்டர் பூர்ணிமா தேவி பர்மன் இந்த ஆண்டிற்கான புவியின் வெற்றி வாகையாளர்கள் விருதினைப் பெற்றவர்களில் ஒருவர் ஆவார்.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதாகும்.
  • சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுத்தல், நிறுத்துதல் மற்றும் மீண்டும் மாற்றியமைத்தல் ஆகியவற்றில் அவர்களின் மாற்று நடவடிக்கைக்காக இந்த விருதானது வழங்கப் படுகிறது.
  • அசாமிய மொழியில் "ஹர்கிலா" ("எலும்பு விழுங்கி" என்று பொருள்படும்) என உள்ளூரில் அழைக்கப்படும் பறவை குறித்த மக்களின் எண்ணத்தை மாற்றுவதற்காக தனக்கு உதவியாக கிராமப்புற பெண்களின் குழு ஒன்றிணைத் திரட்டினார்.
  • கூடு கட்டும் இடங்களைப் பாதுகாக்கவும், காயமடைந்த நாரைகளைப் பாதுகாத்து அவற்றிற்கு மறுவாழ்வு வழங்குவதற்கான "ஹர்கிலா குழுவில்" தற்போது 10,000க்கும் மேற்பட்ட பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்