ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக புவியியல் பரப்பு மன்றத்தின் (Geospatial world Forum) சந்திப்பில் ஒடிஸா மாநிலத்திற்கு 2018ஆம் ஆண்டிற்கான புவியியல் பரப்பின் உலக சிறப்பு விருது (Geospatial World Excellence Award) வழங்கப்பட்டுள்ளது.
i3MS என்ற இணையதள அடிப்படையிலான மென்பொருளின் மூலம் உண்மை நேர அளவில் தனிமங்களின் உற்பத்தி, அனுப்புகை மற்றும் அவற்றின் சந்தை மதிப்பை கண்காணிப்பதற்கு வெற்றிகரமான தகவல் தொழிற்நுட்ப பயன்பாட்டை ஏற்படுத்தியதற்காக ஒடிஸாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வரில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்ட GPS வசதி இணைக்கப்பட்ட இணையதளத்தின் அடிப்படையிலான மென்பொருளே i3MS (Integrated Mines and Mineral Management System) ஆகும்.
கனிம துறையில், பெரிய அளவில் கனிமங்களை கொண்டு செல்லும் நகர்வுடைய போக்குவரத்து வசதிகளின் மீது GPS சாதனங்களை பொருத்தி அவற்றை கண்காணிப்பது இதுவே முதல் முறையாகும்.