TNPSC Thervupettagam

புவியைச் சரி செய்தல் நடவடிக்கைக்கான பரிசு 2023

November 14 , 2023 230 days 208 0
  • இளவரசர் வில்லியம் மற்றும் எர்த்ஷாட் பரிசு சபை மூலம் முன்வைக்கப்பட்ட 15 இறுதிப் போட்டியாளர்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் இருந்து இந்த ஆண்டு இந்தப் பரிசினை வென்ற வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இது “சுற்றுச்சூழல் ஆஸ்கார்” என்றும் அழைக்கப்படுகிறது.
  • இதற்கான போட்டியானது ஐந்து “புவியைச் சரி செய்தல் நடவடிக்கைகள்” அல்லது சுற்றுச் சூழல் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது.
  • S4S டெக்னாலஜிஸ் எனப்படுகின்ற ஒரு இந்திய முழுமையான உணவு-பதப்படுத்துதல் மற்றும் சூரிய-தொழில்நுட்பத் தளம், இந்த ஐந்து வெற்றியாளர்களில் ஒன்றாகும்.
  • 2023 பரிசு ஆம் ஆண்டிற்கான இப்பரிசினைப் பெற்ற மற்ற வெற்றியாளர்கள்:
    • தென் அமெரிக்க வனப் பாதுகாப்பு முன்னெடுப்பான ஆக்ஷியன் ஆண்டினா;
    • அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட நில மறுசீரமைப்பு ஊக்குவிப்பு அமைப்பான பூமித்ரா,
    • ஹாங்காங் நாட்டினைச் சேர்ந்த மின்கல மறுசுழற்சி திட்டம் GRST; மற்றும்
    • சட்டவிரோத மீன்பிடித்தலை எதிர்த்துப் போராடச் செய்கின்ற அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வைல்டு எய்டு கடல்சார் திட்டம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்