புவிவெப்ப ஆற்றல் சார்ந்த தனிப்பட்ட மின் உற்பத்தி ஆலை (IPP)
December 2 , 2023 359 days 239 0
ஜிம்பாப்வே நாடானது, தனது முதல் பயன்பாட்டு சார்ந்த புவிவெப்ப ஆற்றல் சார்ந்த தனிப்பட்ட மின் உற்பத்தி ஆலையிணை (IPP) உருவாக்கி, நாட்டில் பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வைக் குறைக்க உதவ உள்ளதாக அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், ஜிம்பாப்வேயின் மொத்த ஆற்றல் உற்பத்தியில் புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலங்கள் 29 சதவிகிதமும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் 71% சதவிகிதமும் கொண்டுள்ளன.
மொத்த ஆற்றல் உற்பத்தியில், நீர் மின் ஆற்றல் 69% பங்குடன் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட சவால்கள் ஆனது, தீவிர சுமை குறைப்பிற்கும், புதைபடிவ எரிபொருட்கள் மீது அதிகம் சார்ந்திருக்கும் நிலைக்கும் வழி வகுத்தது.
2021 ஆம் ஆண்டில், உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வில் ஜிம்பாப்வே நாட்டின் பங்கு 0.03% மட்டுமே ஆகும்.
இது தீவிர பருவநிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதோடு பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் முதல் 10 நாடுகளில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.