தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சி அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பூச்சியியல் துறையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் 50 இனங்களைச் சேர்ந்த 20,000 பூச்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் பயன்தருபவை மற்றும் இடர்தருபவை ஆகிய இரு வகையைச் சேர்ந்த பூச்சியினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது இந்தியாவின் முதல் பூச்சிப் பூங்கா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
6,691 சதுர அடி பரப்பில் இந்த அருங்காட்சியகமானது கட்டப்பட்டுள்ளது. பூச்சியினங்களின் பல்வகைத் தன்மை, பூச்சி உயிரினங்கள், பயனுள்ள பூச்சியினங்கள், பூச்சியினங்கள் மற்றும் தாவரங்கள் மற்றும் கலாச்சார பூச்சியியல் (Cultural entomology) ஆகிய கருத்துருக்களின் அடிப்படையில் காட்சிப்படுத்துவதற்கானத் திரைகளுடன் கூடிய ஏழு ரேடியல் சுவர்கள் (Radial walls) இவ்வருங்காட்சியகத்தின் கண்காட்சிப் பகுதியில் உள்ளன.
27 பூச்சிகளின் வரிசைகளின் தேர்தெடுக்கப்பட்ட மாதிரிகள் (Curated specimen) இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இவ்வருங்காட்சியகத்தில், பூச்சிகள் தொடர்பான செய்திகளை அளிப்பதற்காக தொலைக்காட்சித் திரைகள், முப்பரிமாண வடிவிலான பூச்சிகளின் வடிவங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் கடைகளும் (Souvenir shop) இடம் பெற்றுள்ளன.