2024-ல் சுமார் 6 மில்லியன் விவசாயிகளுக்கு நன்மையளிப்பதை நோக்கமாகக் கொண்ட பூஜ்ஜிய செலவுடைய இயற்கை வேளாண்மை (Zero Based Natural Farming -ZBNF) எனும் திட்டத்தை ஆந்திரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக நீடித்த இந்திய நிதி வசதி (Sustainable India Finance Facility -SIFF) எனும் அமைப்புடன் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வேளாண் துறை ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
உலக வேளாண் வன மையம் (World Agroforestry Center), BNP பரிபாஸ் (BNP Paribas), ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (United Nations Environment Program) ஆகியவற்றின் கூட்டிணைவால் ஏற்படுத்தப்பட்ட தொடக்கமே நீடித்த இந்திய நிதி வசதி ஆகும்.
நீடித்த இந்திய நிதி வசதி ஆனது உழவர்களுக்கு நிதியியல் மற்றும் முதலீட்டு ஆதரவுகளை வழங்கும்.