சீர்தர இயக்க செய்முறைகளை (SOPs) வடிவமைத்த பிறகு இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபையில் பூஜ்ஜிய நேரம் (முக்கிய விவகாரங்கள் குறித்த கேள்வி எழுப்பும்) முதல் முறையாக அறிமுகப் படுத்தப்படும்.
அவையில் பட்டியலிட முடியாத அல்லது விதிகளின் கீழ் பட்டியலிடப்படாத பொது நலன் சார்ந்த அவசரப் பிரச்னைகள் மட்டுமே கேள்வி நேரத்தின் போது எழுப்பப்படும்.
ஆனால் சபாநாயகருக்கு எந்த ஒரு பிரச்சினை குறித்தும் விவாதிக்க அனுமதிக்கும் விருப்புரிமை உள்ளது என்பதோடு அதற்கு உடனடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
சபாநாயகர் மிக நடுநிலை நிலையினை வகிக்கிறார் என்பதையும், அரசாங்கத்தின் நெருக்கடிக்கு உட்பட்டுச் செயல்படவில்லை என்பதையும் இந்தப் பூஜ்ஜிய நேரமானது நிரூபிக்கிறது.
பாரம்பரியமாக அரை மணி நேரம் நீடிக்கும் இந்தப் பூஜ்ஜிய நேரமானது, மிக அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த சில விவகாரங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.