TNPSC Thervupettagam

பூஜ்ஜியப் பாகுபாடு தினம் – மார்ச் 01

March 4 , 2021 1275 days 424 0
  • பூஜ்ஜியப் பாகுபாடு தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 01 அன்று ஐக்கிய நாடுகள் மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களால் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது பாலினம், இனம், வயது, வருமானப் பிரிவு, சமூகம் மற்றும் மதம் போன்ற மனநிலை வரம்புகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் பூஜ்ஜியப் பாகுபாடு தினமானது தற்பொழுது உலகில் உள்ள பாகுபாடு, அதிலும் குறிப்பாக கோவிட்-19 நோய்த் தொற்றிற்குப் பின்பு ஏற்பட்ட பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பின்னணி

  • இத்தினமானது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் எய்ட்ஸின் (UNAIDS) செயல் இயக்குநரான மிச்செல் சிட்பி அவர்களால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் தினமானது அனைத்து விதமான பாகுபாடுகளை ஒழிப்பதை நோக்கிய உலக ஒற்றுமையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமாது எச்ஐவி/எய்ட்ஸ் உடன் வாழும் மக்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்காகப் போராடும் ஐக்கிய நாடுகள் எய்ட்ஸ் (UNAIDS) போன்ற அமைப்புகளால் குறிப்பாக அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்