பூஞ்சைகள் மற்றும் குங்கிலியம் மர இனங்களுக்கு அச்சுறுத்தல்கள்
April 2 , 2025 8 hrs 0 min 23 0
குங்கிலியம் மரங்களின் அருகி வரும் நிலை மற்றும் அதன் பூஞ்சை அழிவு போன்ற சில அச்சுறுத்தல்களை IUCN அடையாளம் கண்டுள்ளது.
தற்போது சுமார் 1,000க்கும் மேற்பட்ட பூஞ்சை இனங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தற்போது சுமார் 169,420 இனங்கள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் 47,187 அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.
பூஞ்சைகள் ஆனது விலங்குகள் மற்றும் தாவரங்களிலிருந்து மிக வேறுபட்ட அவற்றின் சொந்தப் பிரிவினை/பேரின வகையினைக் கொண்டுள்ளன.
மதிப்பிடப்பட்ட சுமார் 2.5 மில்லியன் இனங்களுடன் விலங்குகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பேரினத்தினைக் கொண்டுள்ளன என்பதோடு அவற்றில் சுமார் 155,000 இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
பரங்கிச் சாம்பிராணி (போஸ்வெல்லியா) மரங்களில் மிகவும் ஐந்து முக்கிய இனங்கள் உள்ளன என்பதோடு அவற்றில் இருந்து தான் குங்கிலியம்/பிராங்கின்சென்ஸ் பெறப் படுகிறது.
இதில் நறுமணக் குங்கிலியம் ஆனது, பல நூற்றாண்டுகளாக வாசனைத் திரவியங்கள், தூபங்கள் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
அவற்றுள் B. செராட்டா (இந்தியப் பிராங்கின்சென்ஸ்), B. கார்டெரி மற்றும் B. சாக்ரா ஆகியவை மிகவும் பிரபலமானவையாகும்.
இந்த இனங்களின் IUCN பாதுகாப்பு நிலை புதுப்பிக்கப்பட்டுள்ளது:
ஏமன் நாட்டின் சோகோட்ரா என்ற தீவில் உள்ள 5 வகையான பிராங்கின்சென்ஸ் (போஸ்வெல்லியா), எளிதில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருந்து அருகி வரும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன,
ஒரு இனம் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்து மிக அருகி வரும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. மற்றும்
3 இனங்கள் மிக முதல் முறையாக மிக அருகி வரும் நிலையில் உள்ள இனங்களாக மதிப்பிடப் பட்டுள்ளன.