2018 ஆம் ஆண்டு பூடான் பொதுத் தேர்தல்களில், அதன் தேசிய சட்டமன்றத்தின் 47 இடங்களில் 30 இடங்களை வென்று தனிப்பட்ட பெரிய பெரும்பான்மை கட்சியாக டிரக் நியாம்ரப் சோக்பா என்ற கட்சி உருவெடுத்துள்ளது.
பிரதமர் ஷேரிங் டோப்கேயின் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு பூடானில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்ட பிறகும் அவ்வருடமே முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட பிறகும் நடத்தப்பட்ட தேர்தல்களில் ஒட்டுமொத்தமாக இது மூன்றாவது பொதுத் தேர்தலாகும்.
டிரக் நியாம்ரப் சோக்பா கட்சியின் தலைவரான லோடேய் ஷேரிங் பூடானின் அடுத்த பிரதமர் ஆவார்.