TNPSC Thervupettagam

பூதலூர் சோழர் காலக் கோவில்

July 24 , 2023 491 days 318 0
  • தஞ்சாவூர் மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூதலூரில் அமைந்துள்ள சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
  • இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) இதைச் சீரமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
  • பராந்தக சோழன் (907-953 கி.பி.) காலத்தியக் கல்வெட்டுகள் மூலம் இந்தக் கோயிலின் முக்கியத்துவம் அறியப்படுகிறது.
  • மேலும் இக்கோவிலில் மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178-1218 கி.பி.) காலத்தையும் பாண்டிய மன்னர் ஜாதவர்ம சுந்தரப் பாண்டியன் (1250-1284) காலத்தையும் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.
  • சோழர்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில்கள் இருந்திருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் சோழர்கள் இந்தக் கோவிலை ஒரு கற்கோவில் கட்டமைப்பாக மாற்றியுள்ளனர்.
  • இது குறித்து 1972-73 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியக் கல்வெட்டுகள் குறித்த ஆண்டறிக்கையிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்