நியூயார்க்கில் 2 வளர்ப்புப் பூனைகளுக்கு கொரானா நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
இது அமெரிக்காவில் வளர்ப்பு விலங்குகளில் உறுதி செய்யப்பட்ட முதலாவது பாதிப்பு ஆகும்.
ஆனால் பொதுச் சுகாதார அதிகாரிகள் விலங்குகள் இந்த வைரசை மனிதனுக்குப் பரப்பிட எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளனர்.
அமெரிக்காவைத் தவிர்த்து, ஹாங்காங்கில் 2 நாய்கள் மற்றும் 1 பூனைக்கும் பெல்ஜியத்தில் 1 பூனைக்கும் என்று குறைந்த அளவிலான வளர்ப்பு மிருகங்கள் கொரானா பாதிப்பை உறுதி செய்திருக்கின்றன.