TNPSC Thervupettagam

பூபதி ஷீல்டுடெயில்

May 14 , 2018 2258 days 770 0
  • விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பூபதிஸ் ஷீல்டுடெயில் (Bhupathy’s shield tail) எனும் புதிய ஷீல்டுடெயில் பாம்பு இனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
  • தற்சமயம் இப்பாம்புகளானது தமிழ்நாட்டின் ஆனைகட்டி மலைகளில் (Anaikatty hills) மட்டுமே வசிக்கின்றன என அறியப்படுகின்றது. இந்த ஆனைகட்டி மலைகளானது இலையுதிர் வகை தாவரங்கள் (deciduous type of vegetation) நிரம்பிய பகுதியாகும்.
  • இந்தியாவின் குறிப்பிடத்தகு ஊர்வன மற்றும் நீர்நில வாழ் விலங்கின இந்திய ஆராய்ச்சியாளரான (Indian herpetologist) டாக்டர் சுப்ரமணியன் பூபதி அவர்களை கவுரவிக்கும் வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாம்பு இனத்திற்கு, அவர் பெயர் கொண்டு பூபதிஸ் ஷீல்டுடெயில் (Bhupathy’s shield tail) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பாம்பு இனத்தின் விலங்கியல் பெயர் உரோபெல்டிஸ் பூபதி (Uropeltis bhupathyi) என்பதாகும்.
  • இப்பாம்பினமானது அகன்ற மற்றும் நீண்டத் தலையினைக் கொண்டதனால் தன் குழுவினுடைய பிற வகை இனங்களிலிருந்து வேறுபடுகிறது.
  • தற்சமயம் இப்பாம்பினமானது சர்வதேச இயற்கைப் பன்னாட்டு பாதுகாப்பு சங்கத்தின் (IUCN-International Union for Conservation of Nature) அச்சறுத்தப்பட்ட இனங்களினுடைய சிவப்புப் பட்டியலில் (IUCN Red list of threatened species) வகைப்பாட்டிற்கு “தரவு போதாமை” (data deficient) உடைய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • தற்சமயம் உலகம் முழுவதும் 45 அறியப்பட்ட ஷீல்டுடெயில் பாம்பு இனங்கள் உள்ளன. அவற்றில் 30 பாம்பு இனங்கள் இந்தியாவை பூர்வீக வாழ்விடமாகக் (endemic) கொண்டவை ஆகும். மீதமுள்ள 15 இனங்கள் இலங்கையை பூர்வீக வாழ்விடமாகக் கொண்டவை ஆகும்.
  • Herpetology என்பது ஊர்வன உயிரிகள் மற்றும் நீர்நில வாழ் உயிரிகளைப் பற்றிப் படிக்கும் விலங்கியற் பிரிவாகும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்