தற்பொழுது ஒரு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவானது “பூமராங் வகை நிலநடுக்கத்தை” அட்லாண்டிக் பெருங்கடலில் (ரோமாஞ்சே விரிவுப் பகுதி) பதிவு செய்துள்ளது.
இது தொடக்க வெடிப்பில் இருந்து பரவிய ஒரு ஆரம்பகால முறிவாகும். ஆனால் அதன் பின் இது எதிர்புறத்தில் அதிவேகத்தில் திரும்பி நகர்ந்தது.
வழக்கமாக, நிலநடுக்கங்கள் ஒரு பிளவின் மீது திடீரென பாறைகள் உடைந்து போகும் முறிவு நிகழ்வுகளின் போது ஏற்படுகின்றன. இதில் இந்தப் பிளவு என்பது இரண்டு தொகுதிகள் அல்லது கண்டத் தட்டுகளுக்கான ஒரு எல்லையைக் குறிக்கின்றது.