TNPSC Thervupettagam
March 26 , 2018 2436 days 838 0
  • 12வது பூமிநேரம் மார்ச் 24 அன்று30 pm to 9.30 pm வரை கடைபிடிக்கப்பட்டது.
  • பூமி நேரம், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

  • அத்தியாவசியமற்ற விளக்குகளை ஒருமணி நேரம் அணைத்து வைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒன்று சேரும் சுற்றுச் சூழலுக்கான உலகின் மிகப்பெரிய அடிமட்ட அளவிலான இயக்கமே, பூமி நேரமாகும்.
  • இது உலகின் 178 நாடுகள் பங்கேற்கும் இயற்கைக்கான உலக நிதியத்தின் உலகளாவிய தொடக்கமாகும். (Global initiative)
  • சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் மீது அதிக சுமை ஏற்றும் சில பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், வாழ்க்கை முறைகளைக் கைவிடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கு அமைப்புகள், நிறுவனங்கள், தனிமனிதர்களை ஊக்குவிப்பதற்காக 2018 ஆம் ஆண்டின் பூமிநேரத்தின் போது இந்தியா “Give up to Give Back” என்ற தொடக்கத்தைத் (initiative) தொடங்கியுள்ளது.
  • இந்தப் பிரச்சாரம் ஒரு முறை பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக்குகள் (Single-use Plastics), புதை படிவ எரிபொருட்கள், தனியொரு பணியாளருக்கான கார் பயணம், எலக்ட்ரானிக் கழிவுகள் ஆகியவற்றைக் குறைத்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதைத் தெளிவுபடுத்துகிறது .a

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்