TNPSC Thervupettagam
July 29 , 2018 2213 days 617 0
  • முழுமையாக சூரிய ஆற்றலால் இயங்கி கொண்டிருப்பதற்காக கொச்சின் சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (Cochin International Airport Ltd - CIAL) பூமிப் பரிசின் சாம்பியன் 2018 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இது ஐக்கிய நாடுகளினால் (united Nations) தொடங்கப்பட்ட உயர்ந்த சுற்றுச்சூழல் விருதாகும்.
  • கொச்சின் சர்வதேச விமான நிலையம் சமீபத்தில் உலகின் முதல் சூரிய ஆற்றலில் இயங்கும் விமான நிலையமாக மாறியது.
  • இவ்விமான நிலையம் நாட்டில் 2017-2018ல் கையாளப்பட்ட போக்குவரத்துகளில் சர்வதேச அளவில் நான்காவது இடத்திலும் மொத்த போக்குவரத்தில ஏழாவது இடத்திலும் உள்ளது.
  • இவ்விருது நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியில் செப்டம்பர் 26, 2018-ல் வழங்கப்படும்.
  • பூமிப் பரிசின் சாம்பியன் ஆனது 2005ல் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்