TNPSC Thervupettagam

பூமியின் 2வது சந்திரன்

March 2 , 2020 1732 days 711 0
  • சிறிய சந்திரன் (நிலவு) அல்லது பூமியின் 2வது சந்திரன் என அழைக்கப்படும் “2020 சிடி 3” ஆனது அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள நாசாவினால் நிதியுதவி அளிக்கப்படும் கேட்டலினா வான் ஆய்வகத்தின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இது மகிழுந்தின் அளவைப் போன்ற ஒரு சிறுகோள் ஆகும். இதன் விட்டம் சுமார் 1.9-3.5 மீட்டர் ஆகும்.
  • இந்த சிறிய சந்திரன் ஆனது நமது நிரந்தர நிலவைப் போல் அல்லாமல் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து விடுபட்டு அதன் சொந்த வழியில் செல்லும் ஒரு தற்காலிக நிலவாகும்.
  • இந்த சிறுகோள் பூமியின் சுற்றுப்பாதையை கடக்கின்றது. நமது நிரந்தரமான சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைக்கு உட்படும் போது அது சில ஆண்டுகளாக பூமியின் சுற்றுப்பாதையில் பயணித்து, அதன் பின்னர் இதிலிருந்து விடுபட்டு சூரியனைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் செல்லும்.
  • இந்த வகை சிறுகோள் “தற்காலிகமாகப் பிடிக்கப்பட்ட பொருள்” என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்த 2வது சந்திரன் ஆனது 3 ஆண்டுகளாக பூமியின் சுற்றுப்பாதையில் பயணிக்கின்றது.
  • முன்னதாக RH120 ஆனது 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று 27 அங்குல அளவுடன் கண்டுபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்