TNPSC Thervupettagam

பூமியின் ஆழமான பகுதி

March 2 , 2023 507 days 290 0
  • நமது கோளின் புவியியல் சார்ந்த மர்மங்களைக் கண்டறியும் முயற்சியில் பூமியின் ஐந்தாவது உள்ளடுக்கானது அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மேலோடு, மூடகம், வெளிக் கருவம் மற்றும் உள் கருவம் ஆகியவை தான் பூமியின் கட்டமைப்பாக இன்று வரை கருதப்பட்டது.
  • பல்வேறு நில நடுக்கங்களின் போது ஏற்பட்ட நில அதிர்வு அலைகளின் பயண நேரங்களில் உள்ள மாறுபாட்டினை ஒரு குழு ஆய்வு செய்தது.
  • உள் கருவத்தின் உள் பகுதிக்குள் காணப்படும் படிகமாக்கப்பட்ட அமைப்பானது வெளிப்புற அடுக்கிலிருந்து வேறுபட்டிருப்பதாக அக்குழு கண்டறிந்தது.
  • இந்த அமைப்பானது அதிக வெப்பம் கொண்ட, இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றினால் ஆன 800 மைல் (1,350 கிலோமீட்டர்) அகலமான, திடமான, ஒரு பந்து போன்ற அமைப்பாகும்.
  • இந்த அடுக்கானது உள் கருவத்தின் மையத்தில் அமைந்துள்ள ஒரு திடமான 'உலோகப் பந்து' ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்