எதிர்காலத்தில் எட்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்காலப் பூமி எவ்வாறு இருக்கும் என்பதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எட்டு பில்லியன் ஆண்டுகளில் நமது கிரகம் எப்படி இருக்கும் என்று வானியலாளர்கள் தனித்துவமான கண்ணோட்டத்தினைப் பெற்றுள்ளனர்.
KMT-2020-BLG-0414 என அழைக்கப்படும் இந்த கிரகம் ஆனது, ஒரு நட்சத்திரத்தின் பற்றி எரியும் வெள்ளை நிறக் குள்ளக் கோளினைச் சுற்றி வருகின்ற பூமியிலிருந்து 4,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பாறைகள் நிறைந்த உலகமாகும்.
சுமார் 5 பில்லியன் ஆண்டுகளில், நமது சூரியனும் ஒரு வெள்ளைநிறக் குள்ளக் கோளாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன், புதன், வெள்ளி மற்றும் பூமி மற்றும் செவ்வாய் கோள்களும் கூட, ஒரு செந்நிற இராட்சத அமைப்பாக, வெளிப்புறமாக சுழல்கின்ற நமது சூரியனால் உள்ளிழுக்கப்படும்.
சூரியன் ஒரு செந்நிற இராட்சத அமைப்பாக மாறுவதால், நீர் நிறைந்த உலகங்களாக மாற உள்ள பனிக்கட்டி நிறைந்த துணைக் கோளான யூரோப்பா மற்றும் என்செலடஸ் ஆகியவற்றிற்கு மனிதர்கள் இடம்பெயரலாம்.