TNPSC Thervupettagam

பூமியின் ஓசோன் அடுக்கு மீட்பு

January 13 , 2023 687 days 386 0
  • தடை செய்யப்பட்ட ஓசோன்-குறைப்புப் பொருட்களில் கிட்டத்தட்ட 99 சதவிகிதப் பொருட்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருவதை மாண்ட்ரீல் நெறிமுறை அறிக்கை உறுதிப்படுத்தியது.
  • இந்த அறிக்கையின்படி, தற்போதையக் கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தால், 2040 ஆம் ஆண்டில் ஓசோன் அடுக்கு 1980 ஆம் ஆண்டில் இருந்த அளவிற்கு மீண்டும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • ஓசோன் அடுக்கில் துளை இருப்பது முதன் முதலில் 1985 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிவியலாளர்களால் அறிவிக்கப்பட்டது.
  • அண்டார்டிகா பகுதி மீது காணப்படும் ஓசோன் அடுக்கில் சுமார் 2066 ஆம் ஆண்டிலும், ஆர்க்டிக் பகுதியில் 2045 ஆம் ஆண்டிலும் இந்த மீட்சி நிகழும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இருப்பினும், அண்டார்டிக் பகுதியில் ஓசோன் குறைபாடானது, 2000 ஆம் ஆண்டிலிருந்து அதன் பரப்பளவிலும் ஆழத்திலும் மெதுவாக மேம்பட்டு (சரி செய்யப் பட்டு) வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்