பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் (Earth overshoot day)
July 27 , 2018 2698 days 1425 0
2018-ன் பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் ஆகஸ்ட் 1 அன்று ஏற்பட உள்ளது. 1970களில் சுற்றுச்சூழல் எல்லை மீறல் தொடங்கியதிலிருந்து இந்த தினம் சற்று முன்பே நிகழ உள்ளது.
உலகத் தட பிணையம் (Global Footprint network) மற்றும் இயற்கைக்கான உலக அளவிலான நிதி (World Wide Fund - WWF) ஆகியவற்றால் இது கணக்கிடப்பட்டுள்ளது.
இயற்கையின் மீதான மனிதனின் வருடாந்திர தேவை குறிப்பிட்ட வருடத்தில் பூமியால் மறுஉற்பத்தி செய்யும் திறனை மீறும் தினம் இத்தினமாகும்.
2018-ல் மொத்த வருடத்திற்கான இயற்கையின் வளங்கள் மொத்தமும் வெறும் 8 மாதக் காலத்திலேயே உபயோகப் படுத்தப்பட்டுவிட்டன.
அதாவது மனித இனம் தற்பொழுது பூமியின் சுற்றுச்சூழலினால் மறுஉற்பத்தி செய்யும் திறனை விட 1.7 மடங்கு வேகத்தில் இயற்கையை பயன்படுத்துகிறது.
இந்த வருடம் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் கடந்த வருட தினத்தை விட இரண்டு நாட்கள் முன்பாகவே வருகிறது. ஆகஸ்ட் 1-க்கு பிறகு ஒவ்வொரு தினமும் பூமியின் இயற்கை வளங்களின் மீதான சுரண்டலாகவே கருதப்படும்.