TNPSC Thervupettagam

பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் 2021

August 2 , 2021 1085 days 587 0
  • 2021 ஆம் ஆண்டின் பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினமானது கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்னதாக ஜூலை 29 அன்று நிகழ்ந்தது.
  • மாசு உமிழ்வுகளின் அதிகரிப்பு மற்றும் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க இழப்புகள் ஆகியவற்றின் காரணமாக இது முன்னதாகவே ஏற்பட்டுள்ளது.
  • இந்த தேதியானது உலகளாவியத் தடப்பிணையம் என்ற அமைப்பினால் ஒவ்வோர் ஆண்டும் அறிவிக்கப் படுகிறது.
  • புவியானது ஒரு வருடத்திற்குத் தேவையான இயற்கை வளங்களை ஒரு ஆண்டில் மீண்டும் தயாரிப்பதற்குள் அவற்றை மனித இனம் முழுமையாகப் பயன்படுத்திய ஒரு தினமே பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினமாகும்.
  • பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் எனும் கருத்துருவாக்கமானது ஆன்ட்ரூ சிம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்