1971 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்பல்லோ 14-ன் விண்வெளி வீரர்களால் எடுத்துவரப்பட்ட நிலவு மாதிரியிலிருந்து கண்டறியப்பட்ட நிலவில் உள்ள பழமையான பாறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியின் மேலடுக்கிலிருந்து 12.4 மைல்களுக்கு கீழாக அமைந்த இப்பாறையானது 4 மற்றும் 4.1 பில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவானதாகும்.
2 கிராம் அளவுள்ள இப்பாறையின் மாதிரியானது பூமியில் பொதுவாகக் காணப்படும் மற்றும் பெரும்பாலும் நிலவில் காணப்படாத படிகக்கல், பெல்ட்ஸ்பர் மற்றும் ஸிர்கோன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.