TNPSC Thervupettagam

பூமியின் முதன்மை E அடுக்கு

December 31 , 2023 202 days 226 0
  • பூமியின் மையத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள புதிய புதிரான அடுக்காக மேற்பரப்பு நீர் புவிக் கிரகத்திற்குள் ஆழமாக ஊடுருவியதன் விளைவாக உருவான  முதன்மை E அடுக்கானது உள்ளது.
  • மேற்பரப்பு நீரைச் சுமந்து செல்லும் கண்டத்தட்டுகள் பல பில்லியன் ஆண்டுகளாக பூமிக்குள் ஆழமாக இதனைக் கொண்டு சென்றுள்ளன.
  • உட்புகுந்த நீரானது அதிக அழுத்தத்தின் கீழ் கருவ அடுக்கின் பொருட்களுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிகிறது.
  • இந்த வினையானது வெளிப்புற மையத்தில் ஹைட்ரஜன் நிறைந்த, சிலிக்கான் -குறைந்த அடுக்கு உருவாக வழிவகுக்கிறது.
  • இந்தச் செயல்பாட்டின் மூலம் உருவாகும் சிலிக்கா படிகங்கள் கவச அடுக்குடன் இணைந்து கலந்து, அதன் ஒட்டு மொத்த இயைபைப் பாதிக்கிறது.
  • திரவ உலோக அடுக்கில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அதன் அடர்த்தி குறைவதற்கும் நில அதிர்வுப் பண்புகளை மாற்றுவதற்கும் காரணமாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்