TNPSC Thervupettagam

பூமியின் முதல் நிலப்பரப்பு

November 16 , 2021 977 days 638 0
  • க்ராட்டன்கள் (cratons) எனப்படும் பூமியின் முதல் கண்டங்கள் கடலில் இருந்து 3.3 பில்லியன் மற்றும் 3.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையக் காலகட்டத்தில்  தோன்றியதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
  • இந்தப் புதிய ஆய்வானது சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருங் கடல்களில் இருந்து கண்டங்கள் எழுந்தன என்ற பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தை எதிர்த்துக் கேள்வி கேட்டுள்ளது.
  • ஜார்க்கண்டில் உள்ள சிங்பூம் பகுதியே முதன்முதலில் தோன்றிய கண்ட நிலப் பரப்பாக இருக்கலாம் என்றும் இந்த ஆய்வானது  கண்டறிந்துள்ளது.
  • 3.2 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான நதிக் கால்வாய்கள், கடல் பரப்புகள் மற்றும் கடற்கரைகள் ஆகியவற்றின் புவியியல் அச்சுகளுடன் கூடிய, சிங்பூமில் உள்ள மணற்கற்கள் காற்றில் வெளிப்பட்ட ஆரம்பகால மேலடுக்கினைக் குறிப்பதாகவும் இந்த ஆய்வானது கண்டறிந்துள்ளது.
  • சிங்பூம் பகுதியின் கண்ட மேலடுக்கினை  உருவாக்கும் கிரானைட்டுகள் 3.5 முதல் 3.1 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை ஆகும்.
  • இது மணற்கற்கள் ‘முதல் நிலப்பரப்பு எப்போது உருவானது’ என்றும், கிரானைட் ‘முதல் நிலப்பரப்பு எப்படி உருவானது’ என்றும் நமக்கு கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்