TNPSC Thervupettagam

பூமியின் மூன்றாவது ஆற்றல் புலம் – துருவக் காற்று

September 15 , 2024 69 days 101 0
  • ‘துருவக் காற்று’ எனப்படும் பூமியின் மூன்றாவது ஆற்றல் புலமான எதிரெதிர் துருவ நிகழ்வு – ஆம்பிபோலார் - ஆனது இதுவரை கோட்பாட்டளவில் மட்டுமே இருந்தது.
  • 60 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு தற்போது இது நாசாவால் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
  • வட மற்றும் தென் துருவங்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் பூமியின் வளிமண்டலம் எவ்வாறு வேகமாக ஆவியாகிறது என்பதற்கான முக்கியமானப் பதில்களை துருவக் காற்று கொண்டுள்ளது.
  • ஆம்பிபோலார் புலம் இது வளிமண்டல துகள்களை விண்வெளிக்கு உயர்த்துகின்ற ஒரு கொணர்வுப் பட்டை போன்று செயல்படுகிறது.
  • நமது வளிமண்டலத்தினைப் பேணுவதற்கு ஈர்ப்பு புலம் காரணமாக உள்ளது என்ற ஒரு நிலையில் போதுமான ஈர்ப்பு விசை இல்லை என்றால் அது விண்வெளியைச் சென்று அடைந்து விடும்.
  • காந்தப்புலம் என்பது பூமியை சூரியக் காற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாகும் என்பதோடு இது சூரியனால் வெளியிடப்படும் மின்னூட்டம் பெற்ற துகள்களின் பாய்வு ஆகும்.
  • ஆம்பிபோலார் புலம் என்பது ஈர்ப்பு விசையை எதிர்த்து, துகள்களை விண்வெளியில் வெளியேற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்