அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் “ஆழ்கரிம வான் ஆய்வகம்” என்று அழைக்கப்படும் ஒரு 10 ஆண்டு காலத் திட்டமானது பூமியில் உள்ள மொத்த கரிமங்களை மதிப்பிட்டுள்ளது.
இந்த திட்டமானது 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
மேலும் இத்திட்டமானது எரிமலைகளால் வெளியிடப்பட்ட மொத்த கார்பன் டை ஆக்சைடு பற்றிய பகுப்பாய்வையும் உள்ளடக்கியுள்ளது.
மனித குலத்தின் வருடாந்திர கார்பன் உமிழ்வானது அனைத்து எரிமலை உமிழ்வுகளையும் விட 40 முதல் 100 மடங்கு அதிகமாகும்.
பூமியில் உள்ள மொத்தக் கரிமமானது 1.85 பில்லியன் ஜிகா டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.