TNPSC Thervupettagam

பூமியை ஒத்த செவ்வாய்

March 12 , 2021 1264 days 615 0
  • நாசாவானது ஜெசீரோ பள்ளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் தாதுக்கள் மற்றும் கல் படிவுகள் பூமியில் சால்டா பகுதியில் உள்ள படிவுகளுடன் ஏறத்தாழப் பொருந்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
  • ஜெசீரோ பள்ளம் என்பது  பெர்சிவரன்ஸ் விண்கலம் தரையிறங்கிய ஒரு இடமாகும்.
  • மேலும் ஜெசீரோ பள்ளமானது ஒரு காலத்தில் நீரால் சூழப்பட்டது என்றும் நம்பப் படுகின்றது.
  • துருக்கியில் உள்ள சால்டா ஏரிப் பகுதியில் காணப்படும் பாறைகள் நீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் படிவுகளைப் பிடித்து வைத்துள்ள, பூமியில் ஒரு காலத்தில் இருந்த ஒரு முதன்மையான உயிர் வடிவமான நுண்ணுயிரிகளால் உருவானதாகும்.
  • செவ்வாய்க் கிரகத்தில் தற்போது தரையிறங்கியுள்ள நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலமானது (நடமாடும் கலம்) ஜெசீரோ பள்ளத்தில் நுண்ணுயிரிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யும்.
  • மேலும் இது சால்டா ஏரியில் சேகரிக்கப்பட்ட படிவுகளைச் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படிவு எச்சங்களுடன் பொருத்திப் பார்க்கும்.
  • இது செவ்வாய்க் கிரகப் படிவுகள் மற்றும் சால்டா ஏரிப் படிவுகள் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்