நாசாவின் வெளிக்கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பட்ட செயற்கைக் கோளானது (TESS - Transiting Exoplanet Survey Satellite), பூமி போன்ற இரண்டு வெளிக்கோள்களான ‘சூப்பர் எர்த்’ மற்றும் ‘ஹாட் எர்த்’ ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளது.
TESS ஆனது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள்களை கண்டறிவதற்காக ஏப்ரல் 2018-ல் ஏவப்பட்டது. இதுவே TESS-ன் முதல் கண்டுபிடிப்பாகும்.
TESS ஆனது வெளிக் கோள்கள், தொலை தூரத்தில் உலகைச் சுற்றும் நட்சத்திரங்கள் என வானியல் ஆராய்ச்சியாளர்களால் அறியப்பட்ட விபரங்களை விரிவுபடுத்துவதற்கான இரண்டு வருட திட்டம் ஆகும்.
சூப்பர் எர்த் கோளானது பை மென்சே சி (Pi Mensae c) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 60 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது சூரியனைச் சுற்றும் காலம்3 நாட்கள் ஆகும்.
ஹாட் எர்த் கோளானது LHS 3844 b என பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது சூரியனைச் சுற்றும் காலம் ஒரு மணி நேரமாகும்.
இரு கோள்களும் உயிரினங்களை ஆதரிக்க முடியாத அளவில் மிகவும் சூடாக உள்ளன.