TNPSC Thervupettagam

பூமியைக் கடந்து சென்ற குறுங்கோள்

May 17 , 2022 831 days 433 0
  • 1,600 அடி அளவுள்ள ஒரு மாபெரும் குறுங்கோளானது, மே 15 ஆம் தேதியன்று பூமியைக் கடந்து சென்றது.
  • 388945 (2008 TZ3) எனப்படும் குறுங்கோளானது மே 16 ஆம் தேதியன்று நமது புவியை நெருங்கி  கடந்து சென்றது.
  • இந்தக் குறுங்கோள் பூமியை சுமார் 2.5 மில்லியன் மைல் தொலைவில் கடந்து சென்றது.
  • இருப்பினும், 388945 என்ற குறுங்கோள் நமது புவியை நெருங்குவது இது முதல் முறை அல்ல.
  • இது 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் பூமிக்கு மிக அருகில் 1.7 மில்லியன் மைல் தொலைவில் புவியைக் கடந்து சென்றது.
  • அறிவியலாளர்களின் கூற்றுப்படி, இந்த விண்வெளிப் பாறையானது சூரியனைச் சுற்றி வரும் போது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியைக் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.
  • அடுத்த முறை இது 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் புவியை நெருங்கி வரும்.
  • ஆனால் வெகு தொலைவில் 6.9 மைல் தொலைவில் புவியை இது கடந்து செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்