இந்திய அரசு ஒடிசாவை இந்தியாவின் எஃகு உற்பத்தி மையமாக மாற்றும் என்று இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பயிலரங்கத்தில் மத்திய எஃகுத் துறை அமைச்சர் அறிவித்தார்.
ஜப்பானின் உதவியுடன் இந்திய அரசினால் எஃகு உற்பத்தி மையமாக ஒடிசா மாற்றப் படும் என்று இவர் அறிவித்துள்ளார்.
பூர்வோதயா திட்டமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.
இது கிழக்கு இந்தியாவை ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தி மையமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2030 ஆம் ஆண்டிற்குள் 300 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தேசிய எஃகு கொள்கையின் இலக்கை அடைய உதவ இருக்கின்றது.