உலகத் தரம் வாய்ந்த ஒரு எஃகு மையமாக பூர்வோதயாவைத் தொடங்க உள்ளதாக மத்திய எஃகு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது கிழக்கு மாநிலங்களின் விரைவான வளர்ச்சித் திட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“பூர்வோதயா” திட்டத்தைச் செயல்படுத்துவதில் இந்த அமைச்சகமானது இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்புடன் (Confederation of India Industries - CII) இணைந்துச் செயலாற்ற உள்ளது.
மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதி ஆகிய 5 கிழக்கு மாநிலங்கள் நிலக்கரி, பாக்சைட் மற்றும் டோலமைட் இருப்புக்களை அதிகமாகக் கொண்டுள்ளன.
இப்பகுதியில் ஹால்டியா, பாரதீப், கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற முக்கியத் துறைமுகங்கள் உள்ளன.
இப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள 12 முக்கிய எஃகு மண்டலங்களாவன: