இஸ்ரேலிய நிறுவனத்தினால் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு விற்கப்படும் பெகாசஸ் ஒற்றியறி மென்பொருள் (spyware) என்பதின் தொடர்ச்சியான பயன்பாட்டுச் செய்தி சில புதிய அறிக்கைகளின் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
இது NSO குழுமம் எனும் ஒரு இஸ்ரேலிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒற்றியறி மென்பொருள் சாதனமாகும்.
இந்த மென்பொருளானது மக்களின் கைபேசி மூலமாக அவர்களின் தகவல்களை உளவு பார்க்கிறது.
இது இந்தியாவின் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அறிவியலாளர்கள் போன்றோரை உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையுடன் கூடிய 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.