TNPSC Thervupettagam

பெங்களூரு பிரகடனம்

July 25 , 2017 2550 days 961 0
  • பெங்களூரு பிரகடனம் சமீபத்தில் (23.07.2017) டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மாநாட்டில் ஏற்கப்பட்டது.
  • இம்மாநாட்டிற்கு கர்நாடக அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டது.
  • சமநிலைக்கான வேட்கை (Quest for Equity) என்ற கருப்பொருளுடன் கூடிய இம்மாநாட்டில், உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
  • பெங்களூர் பிரகடன ஆவணம், ஆறு பரந்தபிரிவுகளின்கீழ் 40 பரிந்துரைகளைக் கொண்டுள்ளது. அவை - மக்களைப்பாதுகாத்தல், ஜனநாயக நிறுவனங்களைபலப்படுத்துதல், சமூகநீதியை பரவச்செய்தல், மனிதவள மேம்பாட்டை உயர்த்துதல், பொறுப்பான நிர்வாகத்தை உறுதிப்படுத்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பை ஊக்குவித்தல்.
  • இந்தபிரகடனம் தனியார்துறை, நீதித்துறை, கல்விநிறுவனங்கள், அரசாங்க ஒப்பந்தங்கள், தலித்துகளின் மேம்பாடு போன்ற துறைகளில் உறுதியான நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது.
  • இந்த பிரகடனம் பட்டியலிடப்பட்ட இனத்தவர்மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது அதிகம் கவனம் செலுத்துகிறது.
  • இந்தப் பிரகடனத்தின் முக்கிய கோரிக்கைகள்
    • SC/ST பிரிவினரை நீதிபதிகளாக நியமித்தல், பதவி உயர்வுகள், அரசு ஒப்பந்தங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் நியமனம் செய்வதில் இடஒதுக்கீடு.
    • பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு.
    • விவசாயிகளுக்கான வருமான ஆணையத்தை அமைத்தல்.
    • காவல்துறை சீர்திருத்தங்கள் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல்.
    • படுகொலைகளை தடுக்க அரசு நடவடிக்கைகள்.
    • கல்வி நிறுவனங்களில் பாலினம் மற்றும் சாதிபாகுபாடுகளுக்கு எதிரானசட்டம்
  • ஆகியவற்றிற்காக அழைக்கிறது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்