பெங்களூரு பிரகடனம் சமீபத்தில் (23.07.2017) டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மாநாட்டில் ஏற்கப்பட்டது.
இம்மாநாட்டிற்கு கர்நாடக அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டது.
சமநிலைக்கான வேட்கை (Quest for Equity) என்ற கருப்பொருளுடன் கூடிய இம்மாநாட்டில், உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
பெங்களூர் பிரகடன ஆவணம், ஆறு பரந்தபிரிவுகளின்கீழ் 40 பரிந்துரைகளைக் கொண்டுள்ளது. அவை - மக்களைப்பாதுகாத்தல், ஜனநாயக நிறுவனங்களைபலப்படுத்துதல், சமூகநீதியை பரவச்செய்தல், மனிதவள மேம்பாட்டை உயர்த்துதல், பொறுப்பான நிர்வாகத்தை உறுதிப்படுத்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பை ஊக்குவித்தல்.
இந்தபிரகடனம் தனியார்துறை, நீதித்துறை, கல்விநிறுவனங்கள், அரசாங்க ஒப்பந்தங்கள், தலித்துகளின் மேம்பாடு போன்ற துறைகளில் உறுதியான நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது.
இந்த பிரகடனம் பட்டியலிடப்பட்ட இனத்தவர்மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது அதிகம் கவனம் செலுத்துகிறது.
இந்தப் பிரகடனத்தின் முக்கிய கோரிக்கைகள்
SC/ST பிரிவினரை நீதிபதிகளாக நியமித்தல், பதவி உயர்வுகள், அரசு ஒப்பந்தங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் நியமனம் செய்வதில் இடஒதுக்கீடு.