TNPSC Thervupettagam

பெட்ரோலியக் கரி இறக்குமதி

April 22 , 2020 1682 days 686 0
  • அயல்நாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குநரகமானது பெட்ரோலியக் கரி இறக்குமதிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
  • இதற்கு முன்பு, அது பெட்ரோலியக் கரி இறக்குமதிக்குத் தடை விதித்திருந்தது.
  • பெட்ரோலியக் கரி இறக்குமதியானது சுண்ணாம்புச் சூளை, சிமெண்ட் வளிமயமாக்கல், கால்சியம் கார்பைடு தொழிற்சாலை ஆகியவற்றில் மட்டுமே அனுமதிக்கப் பட்டு இருந்தது.
  • உலகில் பெட்ரோலிய நிலக்கரியை மிகப்பெரிய அளவில் நுகரும் நாடு இந்தியா ஆகும். 

பெட்ரோலிய நிலக்கரி
  • பெட்ரோலிய நிலக்கரியானது “PET COKE” என்று அழைக்கப்படுகின்றது.
  • “PET COKE” ஆனது 80%ற்கும் அதிகமான கார்பனைக் கொண்டுள்ளது.
  • “PET COKE” ஆனது நிலக்கரியை விட 11% அதிகமான அளவில் பசுமை இல்ல வாயுவினை உமிழ்கின்றது.
  • இது அதிக அளவு கார்பன் செறிவைக் கொண்டுள்ளது. மேலும் இது எண்ணெய்ச் சுத்திகரித்தலில் இருந்து பெறப்படுகின்றது. 
  • “PET COKE” ஆனது அலுமினியத் தொழிற்சாலைகளில் முக்கியமான மூலப் பொருளாகப் பயன்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்