தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24 ஆம் தேதியானது ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக’ கொண்டாடப்பட இருக்கின்றது.
இது தொடர்பாக, மாநில அரசு பின்வரும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அரசு நடத்தும் இல்லங்களில் வசிக்கும் ஆதரவற்றப் பெண்கள் 21 வயதைப் பூர்த்தி செய்யும் போது, மாநில அரசு அவர்களின் பெயரில் ரூ. 2 லட்சத்தை வங்கியில் செலுத்தும்.
சிறுமிகளின் வளர்ப்பிற்காக வளர்ப்புப் பெற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திரத் தொகையை மாநில அரசு ரூ. 2,000லிருந்து, ரூ. 4,000 ஆக உயர்த்தியுள்ளது.
அரசாங்க இல்லங்களில் இருக்கும் ஆதரவற்ற (கைவிடப்பட்ட) பெண்களுக்கு சமூக நலம், சமூக நீதி, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுப் பணிகள், சி மற்றும் டி வகைப் பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. இந்தப் பணிகள் தமிழ்நாடு பொதுப் பணியாளர் ஆணையத்தின் வரம்பிற்குள் வராது.
18 வயதைக் கடந்தவுடன் அரசாங்கத்தால் நடத்தப்படும் இல்லங்களை விட்டு வெளியேறிய பின்னர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கான திட்டமும் அறிவிக்கப் பட்டுள்ளது.
‘உலேமாக்கள்’ (இஸ்லாமிய புனிதச் சட்டம் குறித்த சிறப்பு அறிவு பெற்றவர்கள் என அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் அறிஞர்கள்) புதிய இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 50% மானியத்தையும் அவர்களின் ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயர்த்துவதற்கான ஒரு திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது.