TNPSC Thervupettagam

பெண் குழந்தைக்கான சர்வதேச தினம் - அக்டோபர் 11

October 19 , 2019 1866 days 544 0
  • இது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட சர்வதேச அனுசரிப்பு தினம் ஆகும்.
  • அக்டோபர் 11, 2012 -  பெண் குழந்தைக்கான முதல் சர்வதேச தினம் ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “பெண்களின் வலிமை: எழுதப்படாதது மற்றும் தடுத்து நிறுத்த முடியாதது”.
  • 1995 ஆம் ஆண்டில், பெண்கள் பற்றிய நான்காவது உலக மாநாட்டை ஐ.நா. அமைப்பானது சீனாவின் பெய்ஜிங்கில் கூட்டியது.
  • பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரிக்க இந்த மாநாடு தீர்மானித்தது.
  • இந்த மாநாட்டில் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு மிக விரிவான கொள்கை நிகழ்ச்சி நிரல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்