தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தினால் (NSSO) வெளியிடப்பட்ட தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வுத் தகவலானது (Periodic Labour Force Survey - PLFS) 2017-18 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண் தொழிலாளர் சக்தி குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.
இந்தியாவில் பெண் தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate - LFPR) இந்தியாவில் 15 வயதிற்கும் மேல் உள்ள பெண்களில் 4 நபர்களில் 3 நபர்கள் பணியாற்றாமலும் வேலை தேடாமலும் உள்ளனர் என்று கூறுகின்றது.
பீகார் மாநிலம் மிகக் குறைந்த பெண் தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இதில் இந்தியாவின் தென் மற்றும் கிழக்கு மாநிலங்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளன.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின்படி (International Labour Organization - ILO) 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாத காலகட்டத்தில் பணியில் உள்ள இந்தியப் பெண்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 44.4 மணி நேரங்கள் பணியாற்றுகின்றனர் என்று கணித்துள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளின் சராசரி விகிதமான ஒரு வாரத்திற்கு 35-36 மணி நேர அளவிற்கு பெண்கள் பணியாற்றுகின்றனர் என்பதினை விட இது அதிகமாகும்.