தேசிய அளவில் 2017-2018 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கிராமப் புறப் பெண் தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் ஆனது 24.6 சதவீதத்திலிருந்து 41.5% ஆக அதிகரித்துள்ளது.
இது 5 ஆண்டுகளில் பதிவான 69% என்ற ஒட்டு மொத்த வளர்ச்சியைக் குறிக்கிறது.
ஜார்க்கண்ட், பீகார் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்கள் மிகவும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.
தேசிய அளவில் 2017-2018 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நகர்ப்புற பெண் தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் ஆனது 20.4 சதவீதத்திலிருந்து 25.4% ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலமானது 63% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ள அதே நேரத்தில் தமிழ்நாடு நகர்ப்புறப் பெண்களின் LFPR மீதான விகிதத்தில் ஓரளவு உயர்வே பதிவாகியுள்ளது.
குறிப்பாக ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் திருமணமான பெண்களிடையே, பெண்களின் LFPR மீதான விகிதத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.