சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று நிதி ஆயோக் அமைப்பானது பெண் தொழில்முனைவோர் இணையவாயிலை (Women Entrepreneurship Platform - WEP) தொடங்கியுள்ளது.
புகழ்பெற்ற பாடகரான கைலாஷ் கெர் என்பவரால் இசையமைத்து பாடப்பட்ட ‘நாரி சக்தி’ எனும் பெண் தொழிற்முனைவோர் இணையவாயிலுக்கான கருப்பொருள் பாடல் (Theme song) ஒன்றும் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
மூன்று தூண்களின் மேல் இந்த இணையவாயில் கட்டமைக்கப்பட்டுள்ளது, அவையாவன,
இக்ஹா சக்தி (Ichha Shakti) - தங்களுடைய சுய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல்
கியான் சக்தி (Gyaan Shakti) - தொழில்முனைவுத் தன்மையை வளர்த்துக் கொள்ள பெண் தொழில்முனைவோர்களுக்கு தொழில்முனைவு தொடர்பான அறிவு மற்றும் சூழலியல் ஆதரவுகளை வழங்குதல்.
கர்ம சக்தி (Karma Shakti) - வணிக தொழில்களை தொடங்குவதிலும், அவற்றை பெருக்குவதிலும் பெண் தொழிற் முனைவோர்களுக்கு ஆதரவு அளித்தல்.
மதிப்பீட்டு நிறுவனமான CRISIL நிறுவனம் மூலம் பெண்கள் நடத்தும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களினுடைய கடன்களை மதிப்பீடு (Credit Evaluation) செய்தல் போன்ற பல்வேறு தனித்துவ சேவைகளை பெண் தொழிற்முனைவோர்களுக்கு இந்த பெண் தொழில்முனைவுத்தன்மை இணையவாயில் வழங்கவல்லது.